Saturday 31 December 2011

புது வருடம்

துவங்கும் நல்ல நாளும் தெரியும்
வாழும் மொத்த நாளும் தெரியும்
வீழும் அந்த நாளும் தெரியும் !!!
நேரத்தை வீணடிக்கத் தெரியாது 
நாளைக் கடத்தத் தெரியாது
மாதத்தை மறைக்கத்  தெரியாது !!!
இவனுடன் சரியான பாதையில் செல்வோம்
அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் வெல்வோம் !!!

Friday 30 December 2011

புது வருடம்

மணியையும்
நாட்களையும்
வாரங்களையும் 
மாதங்களையும் 
வேறுபாடில்லாமல் அனைவருக்கும்
சமமாகக் கொடுக்கும் எஜமான் !!!

புத்தாண்டு

புத்தாண்டு இனிதே மலரட்டும்
பத்தாண்டு வளர்ச்சி வாழ்வில் ஒளிரட்டும் !!!
சினத்தை மனது மறக்கட்டும்
சிந்தை மகிழ்ச்சியில் சிறக்கட்டும் !!! 

Tuesday 27 December 2011

ஐம்பது - அரைச் சதம்

இந்த வயதில் அனைவருக்கும் வரும் பொறுமை
இந்த மார்க் பட்டயப் படிப்பில் கொடுக்கும் பாஸ் எனும் பெருமை
இந்த எடையில் பெண்கள் மிகவும் அருமை
இந்த விழுக்காடு சம்பள உயர்வு கிடைத்தால் இறைவன் மகிமை 
இந்த சதவீதம் பெண்கள் எதிர் பார்ப்பது  சம உரிமை  
இந்த எண்ணுக்கு உண்டு எதையும் அடைய உதவும் தனித் திறமை !!!

Monday 26 December 2011

கதவு

உடையில்லை
உணவில்லை
சம்பளமில்லை
உயிருமில்லை
இந்த வாயிற்காவலனுக்கு !!!

Friday 23 December 2011

கிறிஸ்துமஸ்

மன்னிப்பை மக்களுக்கு அருளிய
மகா கடவுள் பிறந்த தினம்
மக்களின் துன்பம் மறைந்த தினம்
மகிழ்ச்சி நிறைந்த தினம் !!!

கிருஸ்துமஸ் தாத்தா

வருடத்தின் வயது ஏறினாலும் 
வயது ஏறாத வயதான வாலிபர்
அன்புப் பரிசுகளை வாரி
வழங்குவதில் ஈடு எவர் ???

மது

மயக்கும் துவக்கம்
மறுபடியும் அழைக்கும்
மயங்கியே கிடந்தால்
மயானத்தில் முடிக்கும் !!!

குழந்தை

கையைத் தொடு 
கட்டிப் புடி
முத்தம் கொடு
சண்டை இடு
புரண்டு விளையாடு
பிரச்னை இல்லை
குழந்தையாக இருந்தால் !!!

Thursday 22 December 2011

கத்தரிக்காய்

குடை இழந்தால்
உயிர் இழப்பு !!!

கொசு

நோயை உருவாக்க
ஓசியாய் ஊசி போடும்
ஒரே மருத்துவர் !!!

இரத்தம்

அனைவருக்கும் ஒரே நிறம்
நிறவெறிக்கு எதிராக வரம் !!!

Tuesday 20 December 2011

கோலம்

வாசலில் தினமும் பிறக்கும்
வண்ணக் குழந்தை !!!
வாழ்க்கை ஒரு நாள் மட்டும்
வண்ணம் விண்ணை முட்டும் !!!

Monday 19 December 2011

டாஸ்மாக்

இதில் நல்ல புரிந்துணர்வு
அரசுக்கும் குடிமக்களுக்கும்
அரசு வைக்கும் டார்கெட்-ஐ
எப்போதுமே தாண்டி விடுகிறார்களே !!!

Sunday 18 December 2011

வேண்டும்

யானைப் பலம் வேண்டும்
குதிரை வேகம் வேண்டும்
மாடு உழைப்பு வேண்டும்
எறும்பு சேமிப்பு வேண்டும்
நரித் தந்திரம் வேண்டும்
கங்காரு காவல் வேண்டும்
சிங்கம் ஆளுமை வேண்டும்
கிடைக்குமா ??? ஒரே வழி
மிருகமாய் மாற வேண்டும்
ஹ ஹ ஹ !!!

விஷம்

பாம்பில் விஷம்
நாய்ப் பல்லில் விஷம்
தேள் கொடுக்கில் விஷம்
பூச்சிக் கொல்லி மருந்தில் விஷம்
நீர் கொடுக்கும் அணையிலுமா விஷம் ???
பகைமை மற !!!   பகிர்ந்தளி !!!   பண்பாளியாகு !!!

கவிதை

க - கற்பனை விதை
வி - விளக்கும் கதை
தை - தைக்கும் கவி

உடற்பயிற்சி

தினம் பயிற்சி
எடு முயற்சி
விடு அயர்ச்சி
தவிர் முதிர்ச்சி  !!!

Saturday 17 December 2011

மின்விசிறி

என்ன ஆச்சரியம் !!!
நிற்காமல் ஓடும் இவனுக்கு வியர்க்கவில்லை 
இவனுக்கு கீழே நிற்பவருக்கு வியர்ப்பதில்லை !!!

Friday 16 December 2011

முல்லைப் பெரியாறு

அணையோ மிகவும் உறுதி
அறிந்தும் கேரளம் வாங்குகிறது தமிழர்களின் குருதி
தமிழகம் வருந்துகிறது தவறான நடவடிக்கையைக் கருதி
விரைவில் மாற வேண்டும் இந்த மட்டமான சுருதி
மன்னிப்போம் ! தமிழர்களின் வீரம் அவர்களின் மறதி !!!

Thursday 15 December 2011

புகழ்

தித்திக்கும் கரும்பு அது
அனைவரும் சுவைக்க விரும்புவது
மிகக் கடினம் கிட்ட நெருங்குவது !!!

காதலால்

ஓவியனைத் தோற்கடித்தேன் வரைவதிலே
கவிஞனைத் தோற்கடித்தேன் வர்ணிப்பதிலே
பாடகனைத் தோற்கடித்தேன் பாடுவதிலே
சிற்பியைத் தோற்கடித்தேன் செதுக்குவதிலே
உன்னைப் பார்த்தப் பின்புதான்
ஆஹா !!!  நானும் காதலிக்க ஆரம்பித்து விட்டேனோ ???

சம்பள உயர்வு

ஏதாவது வழி இருக்கிறதா?
வயது உயரும்  போது சம்பளமும்
தானாக உயருமாறு செய்ய !!!

Wednesday 14 December 2011

இரத்ததானம்

மற்றவர் உயிருக்குக் கெடு
தயவுசெய்து இரத்ததைக் கொடு !!!

விசைப்பலகை(கீபோர்டு)

ஒவ்வொரு முறை அழுத்தும் போதும்
அழகான உருவத்தைப் பிரசவிக்கும் கணினிப் பெண்  !!!

கணினிப்பூட்டு(கம்ப்யூட்டர் லாக்)

எந்தச் சாவியாலும் திறக்க முடியாது !!!
எந்தச் சுத்தியாலும் உடைக்க முடியாது !!!

மிதிவண்டி

செலவில்லாமல் செல்லலாம் !
உடல் நோயை வெல்லலாம் !!!

பூ

ஒருமுறை சூடியதும்
வாடி உதிர்ந்து விடுகிறாளே !
இவள்ளல்லவோக் கற்புக்கரசி !!!

கைபேசி

அன்புப் பேச்சையும்
அதிரடி உத்தரவையும்
கோப வார்த்தைகளையும்
கொஞ்சல் பரிமாற்றத்தையும்
சிரிப்புச் சத்தத்தையும் 
விதண்ட வாதத்தையும்
மொழி வேறுபாடுன்றி
மாற்றாமல் மறைக்காமல் குறைக்காமல்
உடனடியாய்ச் சொல்லும்  
நாக்கில்லா செயற்கை வாய் !!!

Tuesday 13 December 2011

ஆரம்பம்

ஆரம்பத்தில் "ரம்பம்" தான்
முடிவில் ஜொலிக்கும் வெற்றிப் பிம்பம் !!!
துணிவுடன் துவங்குவோம் !!!

புண்ணியம்

அணையில் நீரின் அளவு கூடும் போது
திறக்கப்படுகிறது பாதுகாப்புக் கருதி !!!
பணத்தின் அளவு கூடும் போது பிறருக்கு
உதவினால் புண்ணியம் உறுதி !!!

Monday 12 December 2011

பரிசு

வெற்றிக்குக்
கிடைக்கும் 
வெகுமானம் !!! 

தெரியாத மாணவன்

வீட்டில் பண கஷ்டம் தெரியாது
பேருந்தில் அமரும் இருக்கை தெரியாது
கல்லூரியில் வகுப்பறை தெரியாது
தேர்வில் கேள்விக்கு பதில் தெரியாது
தேர்ச்சியில் பதிவு எண் தெரியாது
வாழ்க்கையில் வசந்தம் தெரியாது !!!

Sunday 11 December 2011

புறம்போக்கு

புறம்போக்கு என்று
பிள்ளைகளைத் திட்டாதீர்கள்
அரசியல்வாதிக்குத் தெரிந்தால்
அபகரித்து விடுவார்கள் !!!

மரம் வளர்ப்போம்

மழை பெறும் பூமி மரம் இருந்தால்
வளம் பெறும் வனம் மழை வந்தால்
வசந்தம் பெறும் வாழ்க்கை வனம் செழித்தால்
மரம் வளர்ப்போம் !!!  வசந்தம் பெறுவோம் !!!

உதவி

குடும்பப் பிரச்சனை
வேலைப் பளு
மன உளைச்சல்
தினம் ஒரு தொல்லை ?
உதவலாம் தேவைப்படுபவர்க்கு முழு மனதுடன்
மனம் அடையும் நிம்மதி முழு அளவுடன் !!!

ஆசிரியர்

வாழ்க்கையில் சொந்தம் மற்றும் நண்பர்களைத் தவிர
மறக்கமுடியாத மரியாதைக்குரிய மாமனிதர் !!!

உடை

அழகையும் கௌரவத்தையும் கொடுத்து
மானத்தை காப்பாற்றும் காவலன் !!!
பெறும் சன்மானம்
அடித்து, துவைத்து, பிழிந்து காயப் போடுவதுதான் !!!

கனவு

தூக்கத்தில் ஒரு கலர்ப்படம்
டிக்கெட்  வாங்காமலே !!!

Saturday 10 December 2011

அம்மா சமையல்

காரம் இல்லை
புளிப்பு இல்லை
உப்பு இல்லை
அன்பு  நூறு சதவீதம் உறுதி !!!

காற்றே

புயலாய், தென்றலாய் எங்கும் செல்லும் நீ  
ஏன் இறக்கும் தருவாயில் உடம்புக்குள்
சென்று உயிர் தர மறு(ற)க்கிறாய் ???

ஈமெயில்



காகிதப் பயன்பாடு குறைவு
மரத்துடன் உடன்பாடு உயர்வு
சுற்றுப்புறச் சூழ்நிலை மனநிறைவு
ஈமெயில் செய்க !  மரம் காக்க  !!!

கூகுளுக்கு விண்ணப்பம்

உலகப் பாதையைத் தேடித் தரும் நீ 
என் வாழ்க்கைப் பாதையைத் தேடித் தருவாயா ???

Friday 9 December 2011

மடிக்கணினி

கணக்கில்லாக் கணக்குகளைக்
கண்ணிமைக்கும் கணத்தில்
கையாளும் கையாள் !!!

கணினி வைரஸ்

என்ன கொடுமை !!!
ரத்தமில்லா உடம்பிலும் நோயா ???

பெண்ணின் கண்

பூமிக்கு சவால் !  ஈர்க்கும் விசையில் !!!

நிலை

ஆண்கள் வீசும் வலை 
பெண்கள் சிக்கும் சிலை
முடிவில் கற்புக்கு விலை
பெற்றோர் மனம் கொதிக்கும் உலை
மாறுமா இந்த நிலை ???

முயற்சி

விடா முயற்சி
விண்ணைத் தொடும்
வளர்ச்சி !!!

Thursday 8 December 2011

கண்மணி

கண் எனும் சிறைக்குள் 
இருந்து உலகை 
ரசிக்கும் வாழ்நாள் கைதி !!!

முத்தம்

குழந்தை  பருவத்தில் அன்பு
பிள்ளை பருவத்தில் பாசம்
இளமை பருவத்தில் காமம்
முதுமை பருவத்தில் கனிவு !!!

Tuesday 6 December 2011

துட்டு

வாழ்க்கைப் 
    பூட்டுக்குச் 
         சாவி !!!

சாவு

அப்பாட!!!
இப்போதாவது
இதயத்திற்கு ஓய்வு கிடைத்ததே !!!

அரசியல்வாதி

நாடு எனும்
ரோஜா செடியில்
உள்ள முற்கள் !!!