Saturday, 28 November 2015

மழை

மக்களுக்கு வருத்தம்
வறுத்தெடுத்த வருண
பகவான் மீது !!!

வருண பகவானுக்கும்
வருத்தம் தான்
வழங்கியதை சேமிக்காததர்க்கு !!!

அரசு  ஆயுதமெடுத்து
"அணை"க்க வேண்டும்
அடுத்த மாரியை !!! 

Friday, 4 September 2015

நிலவா - நீயா

நினைவு தெரிந்த நாள் முதலாய் 
நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன் இரவில் 
நித்திரையும் வந்தது நிம்மதியாய் உடலில் 

நீ வந்து நினைவில் நின்றாய்
நிலவும் மறைந்து போனது நிசியில்  
நித்திரையும் இறந்தது உன் நினைவில்

நீ தோன்றினாய் சந்தோசத்தின் சாவியாய் 
நிஜமென நினைத்து நிழல் உலகில் 
நித்தமும் மிதந்தேன் கனவு வலையில் 

நீ யாரேன்றாய் ஓர் ஊடலில் 
நிலைக்கா வார்த்தை அது நம்மில் 
நினைத்தேன் என்னில் என்னவோ உன்னில் 

நிவர்த்தி ஆகாதப் புதிராய் நீ  
நீ வேண்டாம் என்றாய் இடையில் 
நினைவோ உன் வாழ்க்கை வழியில் 

நீக்க முடியவில்லை உன் நினைவை  
நித்திரை வரும் நேரம் நிலவில் 
நிழலாய் உன் முகம் அழகில் 

நீ நீங்கினா நாள் முதலாய்  
நித்தமும் நிலவோடு தான் நித்திரை 
நிஜமாய் வென்றது இயற்கை !!!

Saturday, 22 August 2015

வாட்ஸ் அப்

சிறிய
கைபேசியில்
சிறகை
விரித்து
உலகை
வலம்
வரும்
சிறைப்பறவை !!!

Monday, 25 May 2015

மறப்போம்

இமைக்க மறந்தால் தான் 
தூக்கம் !!!
பகைக்க மறந்தால் தான் 
நட்பு !!!
சோம்பலை மறந்தால் தான் 
சுறுசுறுப்பு !!!
கோபத்தை மறந்தால் தான் 
குதூகலம் !!!
துன்பத்தை மறந்தால் தான் 
இன்பம் !!!
இது போன்றதை மறப்போம் !!! 
வாழ்க்கையில் சிறப்போம் !!!

-- விஜயகுமார்.இரா

நேரம்

நிழலின் உருவம் கூட மாறும் 
நேரம் மாறும் போது !!!
படும் துன்பங்கள் யாவும் மாறும் 
நேரம் வரும் போது !!!
மெய் மறந்தேன் 

என் கண்மணி 
கடித்துப் பழக 
என் கன்னங்கள் !!!
அடாவடியாகக் கடித்தாலும் 
அன்பு மேலோங்கும் 
மனம் புத்துணர்ச்சி பெறும் 
மெய் மறக்கச் செய்யும் !!!
ஒரு கடி போதும் 
உலகம் மறந்து போகும் !!!


Sunday, 10 May 2015

அன்னையர் தினம்

உடம்புக்குள் உதை வாங்கி 
உடல் வருத்தி உருவம் கொடுத்து 
அன்பாலே வளர்த்த அம்மாவை 
மன உளைச்சலுக்கு  ஆளாக்காமல் 
மன நிம்மதியோடு வாழவைப்போம் !!!
வணங்கிடுவோம் !!!
போற்றிடுவோம் !!!

Sunday, 12 April 2015

சுயமரியாதை

நம் சுயசரிதை தெரியாதவரிடம் இழக்கக்
கூடாத ஒன்று !!!
நம்மை அறிந்தவரிடம்
எதிர்பார்க்காமல்
இருப்பது நன்று !!!

உறவு

அனாதைக்குத் தான் தெரியும்
உறவின் அருமை ! பெருமை !! வலிமை !!!

Friday, 10 April 2015

சிகரெட்டின் கோபம்

என்னை அழித்தால் 
உன்னை அழிப்பேன் !!!