இந்நாளில் மக்களாட்சி மலர்ந்தது
மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது
உரிமைகளின் சிறகு விரிந்தது
அடிமைகளின் அழுகை ஒழிந்தது
ஓட்டின்(வாக்கு) வலிமை தெரிந்தது
நிலையான ஆட்சி வந்தது
தேவையை கேட்க முடிந்தது
ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது
பல்துறை வளர்ச்சி பணிந்தது
வல்லரசும் வருவதில் இணைந்தது
குடிமக்கள் மனதை அடைந்தது
உழைப்போம் ! உயர்வோம் ! வல்லரசாவோம் !!!பாரதக் குடியரசின் புகழைப் பாரெங்கும் பரப்புவோம் !!!
No comments:
Post a Comment