அளவில்லாமல் இருக்கணும் உதவி செய்வதில்
அளவோடு இருக்கணும் உணவு உண்பதில்
சுழியமாக இருக்கணும் துரோகம் இழைப்பதில்
சுறுசுறுப்பா இருக்கணும் உழைக்கும் நேரத்தில்
கவனமாக இருக்கணும் முடிவு எடுப்பதில்
கண்டிப்புடன் இருக்கணும் வேலை வாங்குவதில்
பொறுப்புடன் இருக்கணும் பெற்றோர் எதிர்பார்ப்பில்
பாடமா இருக்கணும் சந்ததி படிக்கையில்
வேண்டி இருக்கணும் ஆண்டவன் சன்னதியில் !!!