கோடையில் விழும் கடும் இடியில்
வந்து விழுந்தாய் என் மன மடியில்
கார்காலத்தில் பெய்யும் மழைத் துளியில்
கண்காட்சியாய் நிறைந்தாய் என் கரு விழியில்
வசந்தத்தில் வரும் தென்றல் காற்றில்
கலந்து ஓடினாய் என் இரத்த ஊற்றில்
பனிக் காலத்தில் பொழியும் பனியில்
உரமாக உறைந்தாய் என் உயிர் நுனியில்
இலையுதிர் காலத்தில் உதிரும் இலையில்
சருகாய் உதிர்ந்தாய் என் இதய வலையில்
இனியக் காலச்சக்கரம் மீண்டு(ம்) வருமென்று
காத்திருக்கிறேன் என் உயிர் கொண்டு !!!
வந்து விழுந்தாய் என் மன மடியில்
கார்காலத்தில் பெய்யும் மழைத் துளியில்
கண்காட்சியாய் நிறைந்தாய் என் கரு விழியில்
வசந்தத்தில் வரும் தென்றல் காற்றில்
கலந்து ஓடினாய் என் இரத்த ஊற்றில்
பனிக் காலத்தில் பொழியும் பனியில்
உரமாக உறைந்தாய் என் உயிர் நுனியில்
இலையுதிர் காலத்தில் உதிரும் இலையில்
சருகாய் உதிர்ந்தாய் என் இதய வலையில்
இனியக் காலச்சக்கரம் மீண்டு(ம்) வருமென்று
காத்திருக்கிறேன் என் உயிர் கொண்டு !!!
No comments:
Post a Comment