Saturday, 28 November 2015

மழை

மக்களுக்கு வருத்தம்
வறுத்தெடுத்த வருண
பகவான் மீது !!!

வருண பகவானுக்கும்
வருத்தம் தான்
வழங்கியதை சேமிக்காததர்க்கு !!!

அரசு  ஆயுதமெடுத்து
"அணை"க்க வேண்டும்
அடுத்த மாரியை !!! 

Friday, 4 September 2015

நிலவா - நீயா

நினைவு தெரிந்த நாள் முதலாய் 
நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன் இரவில் 
நித்திரையும் வந்தது நிம்மதியாய் உடலில் 

நீ வந்து நினைவில் நின்றாய்
நிலவும் மறைந்து போனது நிசியில்  
நித்திரையும் இறந்தது உன் நினைவில்

நீ தோன்றினாய் சந்தோசத்தின் சாவியாய் 
நிஜமென நினைத்து நிழல் உலகில் 
நித்தமும் மிதந்தேன் கனவு வலையில் 

நீ யாரேன்றாய் ஓர் ஊடலில் 
நிலைக்கா வார்த்தை அது நம்மில் 
நினைத்தேன் என்னில் என்னவோ உன்னில் 

நிவர்த்தி ஆகாதப் புதிராய் நீ  
நீ வேண்டாம் என்றாய் இடையில் 
நினைவோ உன் வாழ்க்கை வழியில் 

நீக்க முடியவில்லை உன் நினைவை  
நித்திரை வரும் நேரம் நிலவில் 
நிழலாய் உன் முகம் அழகில் 

நீ நீங்கினா நாள் முதலாய்  
நித்தமும் நிலவோடு தான் நித்திரை 
நிஜமாய் வென்றது இயற்கை !!!

Saturday, 22 August 2015

வாட்ஸ் அப்

சிறிய
கைபேசியில்
சிறகை
விரித்து
உலகை
வலம்
வரும்
சிறைப்பறவை !!!

Monday, 25 May 2015

மறப்போம்

இமைக்க மறந்தால் தான் 
தூக்கம் !!!
பகைக்க மறந்தால் தான் 
நட்பு !!!
சோம்பலை மறந்தால் தான் 
சுறுசுறுப்பு !!!
கோபத்தை மறந்தால் தான் 
குதூகலம் !!!
துன்பத்தை மறந்தால் தான் 
இன்பம் !!!
இது போன்றதை மறப்போம் !!! 
வாழ்க்கையில் சிறப்போம் !!!

-- விஜயகுமார்.இரா

நேரம்

நிழலின் உருவம் கூட மாறும் 
நேரம் மாறும் போது !!!
படும் துன்பங்கள் யாவும் மாறும் 
நேரம் வரும் போது !!!
மெய் மறந்தேன் 

என் கண்மணி 
கடித்துப் பழக 
என் கன்னங்கள் !!!
அடாவடியாகக் கடித்தாலும் 
அன்பு மேலோங்கும் 
மனம் புத்துணர்ச்சி பெறும் 
மெய் மறக்கச் செய்யும் !!!
ஒரு கடி போதும் 
உலகம் மறந்து போகும் !!!


Sunday, 10 May 2015

அன்னையர் தினம்

உடம்புக்குள் உதை வாங்கி 
உடல் வருத்தி உருவம் கொடுத்து 
அன்பாலே வளர்த்த அம்மாவை 
மன உளைச்சலுக்கு  ஆளாக்காமல் 
மன நிம்மதியோடு வாழவைப்போம் !!!
வணங்கிடுவோம் !!!
போற்றிடுவோம் !!!

Sunday, 12 April 2015

சுயமரியாதை

நம் சுயசரிதை தெரியாதவரிடம் இழக்கக்
கூடாத ஒன்று !!!
நம்மை அறிந்தவரிடம்
எதிர்பார்க்காமல்
இருப்பது நன்று !!!

உறவு

அனாதைக்குத் தான் தெரியும்
உறவின் அருமை ! பெருமை !! வலிமை !!!

Friday, 10 April 2015

சிகரெட்டின் கோபம்

என்னை அழித்தால் 
உன்னை அழிப்பேன் !!!

Friday, 27 March 2015

முயற்சி

நினைக்கும் போது நடக்கவில்லை யெனில் 
நடக்கும் வரை நினைப்பதை நோக்கி நட !!!

Sunday, 22 March 2015

தண்ணீர் தினம்

நீர் வீணடிப்பு 
உருவம் இல்லாத தண்ணீரை 
உலகில் இல்லாததாய் மாற்றிவிடும் !!!

தண்ணீர் தினம்

நாம் சேமிக்கும் ஒவ்வொரு சொட்டு நீரும்
வருங்கால சந்ததிக்கு நாம் சேர்க்கும் சொத்து !!!

தண்ணீர் தினம்

தாகம் தீர்க்கும் தண்ணீர் என்பது மாறி 
தண்ணீர் கிடைக்குமா எனும் தாகம்
உருவாகாமல் தடுக்க - செய்வோம் இதை 
மழை நீர் சேமிப்பு !!!
மரம் வளர்ப்பு !!!
அளவானா நீர் செலவு !!!

Saturday, 14 February 2015

காதல்

கை படாத காதல் என்றும்  
கற்றுக் கொள்ள வேண்டிய காதல் !!!

Friday, 13 February 2015

காதல்

திரும்பாத பெண்ணாய் நீ 
திருந்தாமல் தொடர்கிறேன் நான் !!!

காதல்

கரு விழியோரம் 
கசிந்த காதல் 
காற்றில் உலர்ந்து
உரு மறையாமல் 
திருமணமாகி 
கரு உருவானால் 
காதல் என்றும் 
கற்புடையது தான் !!!

Tuesday, 3 February 2015

கலக்கம்

எதையும் முடிந்தளவு கணிக்கும் சோதிடம் 
கலங்கும் கணித்துச் சொல்வதில் !
யாருக்கு வரும் காதல் யார் மீதென்று !!!

தொடர்பு

பணம் மட்டும் தெரிந்தால் வியாபாரம் 
காமம் மட்டும் இருந்தால் விபச்சாரம் 
அன்பு மட்டும் தொடர்ந்தால் காதல் !!!