Sunday, 3 August 2014

அழகான முரண்

பெற்றெடுப்பது தாயாக இருப்பினும்
முதலில் குழந்தையைப் பார்ப்பது
மற்றவர் தான் !!!

நண்பர்கள் தினம்

பிரச்சனை நேரத்தில் பின்வாங்கும் 
உறவாக இல்லாமல் 
கை தூக்கிவிடும் நம்பிக்கையாக
உள்ள உறவின் 
பிறந்த நாளே  நண்பர்கள் தினம் !!!

Saturday, 26 July 2014

பேனா

ஊதா நிறத்தில் இரத்தம்
காகிதத்தோடு உறவாடும் நித்தம்
முடிந்தவுடன் அடங்கிடும் சித்தம் !!!

Sunday, 13 July 2014

அன்பு

இறுகக் கட்டிப் போட்டாலும்
சுகம் தான் !!!
அன்புக் கயிறாக இருக்கும் 
பட்சத்தில் !!!

Sunday, 6 July 2014

பூ

பூ பூக்கும் போது
அழகான கர்வத்தோடு பூக்கிறது காலையில் !!!
உன்னைப் பார்த்த பின்
வெட்கிச் சாய்கிறது அந்தி மாலையில் !!!

பூ

பூக்கள் பூப்பது 
பூவையின் பின்னந்தலையும் 
புன்னகைக்கத் தான் !!!

Sunday, 22 June 2014

மாது

கண்ணில் விழும் போது 
மயக்கம் தரும் மாது 
நெஞ்சில் விழும் போது
காதல் தரும் தூது
மஞ்சத்தில் விழும் போது
பரம்பரை தரும் மாது
வஞ்சத்தில் விழும் போது
பிரிவு தரும் தூது
இன்பத்தில் விழும் போது
இயக்கம் தரும் மாது
துன்பத்தில் விழும் போது
துவழ்ச்சி தரும் தூது 
ஊக்கத்தில் விழும் போது
உயர்ச்சி தரும் மாது
ஏக்கத்தில் விழும் போது
இரக்கம் தரும் தூது 
மாது விழும் போது
தூது  தரும் மாது  !!!

Saturday, 21 June 2014

மது

மற்ற அனைத்தையும் மறக்கச்   செய்யும் 
மறக்காமல் தினமும் குடிக்க செய்யும் !!!

ஓவியர்

சித்திரங்களை வரையும் 
போது விழும் 
சிறு துளிகளையும்   
அழகான உருவமாய் 
படைக்கும் உழைப்பாளி !!!

Thursday, 29 May 2014

இதயம்

உன்னை என் இதயத்தில் வைத்தேன்
ஏனென்றால் தூங்கும் போது கூட
அது மட்டும் தான் துடித்து 
நம் அன்பின் ஆயுளை அதிகரிக்கும் !!!

மனைவி சமையல்

சிக்கனையும் மட்டனையும் வறுவலையும் பொரியலையும் 
சுவைத்துச் சாப்பிடத் துடிக்கும் நாக்கு
அதைத் தயாரித்த கைகளின் வலிக்கு
ஆறுதல் சொல்ல அவ்வளவாகத் துடிப்பதில்லை !!!

Saturday, 5 April 2014

தேர்தல்

கைக்கும்
மைக்கும்
மெய்க்கும் 
பொய்க்கும்
புரட்சிக்கும்
வீழ்ச்சிக்கும்
பணத்துக்கும்
பொருளுக்கும்
பதவிக்கும்
பட்டத்துக்கும் !!!

பதில் சொல்

தினம் தினம் 
தேதி மாறும் 
நேரம் மாறும் 
உன் மனம் மாறுமா 
என் கரம் சேருமா 

என் அகம் புறம் 
இரண்டும் சுற்றிச் சுழலுவது 
உன் இடம் வலம் 

இன்று போய் நாளை வா 
என்று சொல்லாமல் 
இன்றே உன் முடிவை
உன் பூவாய் திறந்து
சொல் மாலை கோர்த்து 
எனக்கு மலர் மாலை
அணிவிப்பாயா ???

Sunday, 30 March 2014

தென்றல்

காற்று 
உன்னைத் தொட்டதால் 
தென்றலாய் மாறியதோ ???

Sunday, 2 March 2014

புன்னகை

கவிதை எழுதும் 
போது புன்னகைத்தாள் !!!
புதுக்காவியம் எழுதினேன் !!!

Wednesday, 5 February 2014

சகிப்புத் தன்மை

சகித்து கொள்ளும் போது தான்
சரித்திரத்தில் இடம் பெற முடியும் !!!

Tuesday, 4 February 2014

குடி - மது

தள்ளாடாத வயதில் தள்ளாட வைத்து
அறுபதை இருபதில் காட்டும் time machine !!!

Saturday, 25 January 2014

சாலை

விதிகளை மதித்தால்
வாழ்க்கைப் பயணத்தை அனுமதிக்கும் !!!
விதிகளை மிதித்தால் 
வாழ்க்கைப் பயணத்தை முடிக்கும் !!!

புற்றுநோய்

மது
புகையிலை
சிகரெட் 
பாக்கு
வாங்கினால்
புற்றுநோய் இலவசம் !!!

கடற்கரை

மக்கள் அனைவரும் வந்து மகிழுமிடம்
மீன்கள் வந்து இளைப்பாற முடியவில்லையே !!!