Sunday, 22 December 2013

வோ(ஓ)ட்டு

பழையதை
பிரயோசனமில்லாததை
சரியாக
ஆட்சி
செய்யாததை
ஓட்டுவது !!!

Monday, 2 December 2013

அன்பு

அன்பைத் தெளித்துப் பார்
பட்ட மரமும் துளிர் விடும் !!!

Sunday, 1 December 2013

முரண்

கொடுக்கும் குணம் குறைந்தாலும்
எடுக்கும் குணம் குறையவில்லை !!!

கஷ்டம்

கஷ்டத்தை 
நுரையாக நினை !!!
விரைவில் 
காற்றில் கரைந்து விடும் !!!

Sunday, 24 November 2013

தலைக்கவசம்

மற(று)க்காமல் அணிவோம் 
மகிழ்வோடு திரும்புவோம் !!!

காதல்

கண்ணில் 
படாத 
ஒன்று 

கட்டிபோடும் 
பாலினம் 
இரண்டு 

வெற்றியெனில் 
குழந்தையோடு 
மூன்று 

பிரிவெனில்
எண்ணிக்கை 
எப்படி ???

மின்னல்

அவள்
சிரிப்பில்
கிடைக்கும்
கணநேர
ஒளி !!!

அதிகம்
சிரிக்காதே
அடுத்தவருக்கு
ஆபத்தில்
முடியும் !!!

சாலை

ஊர்களை 
இணைக்கும் 
நரம்பு 
மண்டலம் !!!

Wednesday, 9 October 2013

கனவு

கனவுக் கதவைத் திறந்தால்
கன்னி அவள் உதயமில்லை
கனவுக்கும் ஓர வஞ்சனையா ???

Thursday, 5 September 2013

ஆசிரியர்

படத்தோடு பாடம் எடுத்தாலும்
கற்பனைப் படம் எடுக்கும்
கற்பனையின் கதவு சாத்தி
கல்விக் கதவு திறந்து
வாழ்க்கை வீடு நுழைய
வழி வகை செய்யும்
விலை மதிப்பிலாத சாவி !!!

இந்த ஆசிரியர் தினத்தில் வணங்குவோம் !!!

Wednesday, 4 September 2013

அலுவலகம்

சம்பளத்துக்கு உழைப்பை விற்குமிடம் !!!

Tuesday, 13 August 2013

உன் நினைப்பில்

இழுக்கும் மூச்சுக் காற்று
நீயாக இருந்தால் மெதுவாக
இழுப்பேன் உனக்கு வலிக்கக்
கூடாது என்பதற்காக !!!

மெதுவான சுவாசம்
உயிர் கேட்கலாம் !!!

உன் நினைப்பில்
உயிர் பயம் பறக்கிறது !!!

Thursday, 8 August 2013

பெயர் தெரியாமல்

பெண் பெயர் தெரியாமல் 
பின்னால் அலைந்தால்
பின்னால் தன் பெயர்
தெரியாமல்(நினைவில்லாமல்) அலையும்
நிலை வருமோ ???

உயிருள்ள ஆடை

கடந்து செல்லும் கன்னியின்
மேலாடையின் சிறு பகுதி
மேலேபடும் போது அவள்
மெல்லத் தொடும் சிலிர்ப்பு
அறிந்து  கொள்ளலாம் அவள்
அணியும் ஆடைக்கும் உயிருண்டு !!!

Sunday, 4 August 2013

நண்பர்கள் தினம்

நட்பு கொடு...
அன்பு கொடுக்கும் 
ஆதரவு கொடுக்கும் 
உணவு கொடுக்கும்
உணர்வு கொடுக்கும்
கை கொடுக்கும்
நம்பிக்கை கொடுக்கும்
பலம் கொடுக்கும்
அனைத்தும் கொடுக்கும்
ஆதலால் நட்பு கொடு !!!
நண்பர்கள் தினம்

கற்காலம் முதல்
கணணி யுகத்திலும் 
காணவிருக்கும் காலத்திலும்
காணமுடியா வரும் காலங்களிலும்
தூய்மையான உறவாய் நட்பு !!!

Sunday, 7 July 2013

காதலா ???

காதல் கற்போடு
காலம் முழுதும் 
காற்றில் மிதக்கும்
கலவிக்காக நடக்கும்
கன்றாவி காணாமல் 
கரைந்து விடும் !!!

Monday, 10 June 2013

முரண்பாடு

மனித வாழ்க்கை முடிந்த பின்பு தான் புதைக்கிறோம்
விதையை வி(பு)தைத்த பின்பு தான் வாழ்க்கை துவங்குகிறது !!!

Wednesday, 5 June 2013

கொட்டாவி

ஆவி வெளியேறியதும்
அணைப்பது தூக்கம் !!!

குடி

குடி வலியுறுத்துவது 
சீக்கிரம் மடி !!!

அன்பு

தினமும் கொட்டுகிறேன்
அள்ளுவதற்கு ஆளில்லை
கடைசியில் தெருக்
குப்பையுடன் கலக்கிறது
விலைமதிப்பிலாத அன்பு !!!

முகநூல் (பேஸ்புக்)

ஒவ்வொரு பக்கத்திலும்
ஒரு முகம்
இணைப்பில் கிடைக்கும் 
அறிமுகம்
புதிதாக நண்பர்களை 
சேர்க்கலாம்   
நாளான நட்பைப் 
புதுப்பிக்கலாம்
நாகரிகமாக  காதலை
வெளிப்படுத்தலாம்
நலிவடைந்த வியாபாரம் 
சரிசெய்யலாம்
சோர்வடைந்தால் நண்பரோடு 
உரையாடலாம்   
கடினமான கருத்துக்களை
பகிரலாம் 
ஒவ்வொரு முகத்துக்கும் 
தேவை இந்த இணையமுகம்  !!!

Monday, 27 May 2013

தாகம்

தாகத்தைத் தீர்ப்பது மேகம்
மோகத்தைத் தீர்ப்பது தேகம் !!!

Monday, 20 May 2013

களைப்பு

வானம் தொட்டு வெயிலில் வந்த
காற்றை உன்னிடம் அனுப்பி வைத்தேன்
உன்னைத் தொட்டு இ(க)ளைப்பறட்டும் என்று !!!

Sunday, 12 May 2013

அன்னையர் தினம்

தன் வயிறு நிறையாவிடினும்
நம் வயிற்றுப் பசியடங்க
உடம்பு ஒத்துழைக்கா விடினும்
பக்குவமாய் சமைத்துப் பரிமாறி
பிள்ளை உடல் வளர்த்து 
ஆளாக்கி அழகு பார்க்கும்
தெய்வம் காலடியில் வணங்கி
ஆசி பெறுவோம் இந்த அன்னையர் தினத்தில் !!!

அம்மா

உலகைக் காட்டும் அம்மாவை
உலகில்  நிம்மதியின்றி அலையை விடாதே !!!

அம்மா

ஆதரவாய் அணைத்து முத்தம் கொடுக்கும் போதும்
அன்பாய் பிசைந்து சோறு ஊட்டும் போதும் 
கை பிடித்து நடை பழக்கும் போதும்
தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும் போதும்
வளர்ச்சியின் ஒவ்வொரு பரிமாணத்தின் கவனிப்பின் போதும்
அன்னையிடம் இருக்கும் உண்மை ஆண்டவனுக்கும் மேலே
அன்னையைக் வணங்கி வாழ்வது நமதுக் கொடுப்பினை 
உயிர் இருக்கும் வரை அன்னையின் அன்பில் கவனிப்பில்
உயிர் இருக்கும் வரை அன்னையைக் காப்பதில் நேசிப்பதில் !!!

Wednesday, 8 May 2013

சூரியன்

ஏன் இவ்வளவு தாகம்
பூமியின் நீரை மட்டுமல்லாது
உயிரினத்தின் நீரையும் உறிஞ்சுகிறதே !!!

நீ

எழுதும் போது எழுது கோலாய்
நீயிருந்தால் எழுத்துகள் அத்தனையும் முத்துக்களே !!!

Friday, 3 May 2013

வெறுப்பு

மனங்களில் வரும் காய்ச்சல்
மனம் விட்டுப் பேசுவதால் குணமாகும் !!!

கவிதை

எத்தனையோ கவிதை எழுதினேன்
என் கைகள் அலுத்துப் போனது
ஆனால் கவிதை அசரவில்லை
உன் அழகை வர்ணிக்க !!!
வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக
வழிய வந்து நிற்கின்றன !!!

Wednesday, 1 May 2013

தொழிலாளர் தினம்

உடம்பின் அனைத்துப் பாகங்களையும்
மூலதனம் ஆக்கி உழைத்து
உலகத்தை இழுத்துச் செல்லும்
பாட்டாளிக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் !!!

Sunday, 28 April 2013

தேடல்

ஒவ்வொரு
பருவத்திலும்
எல்லோரும்
எதையாவது
தேடுகிறோம்
மரணத்தைத் தவிர !!!

ஆசிரியர்

சொற்களைப் பொருத்தமாகவும்
அர்த்தங்களைத் திருத்தமாகவும்
நற்பண்புகளை நயமாகவும்
நேர்மையை நேர்த்தியாகவும்
உழைப்பை உயர்வாகவும்
ஒழுக்கத்தை உயிராகவும்
மனதில் நிலைபெறச்
செய்யும் மகான் !!!

Friday, 26 April 2013

தடை வருமா


எத்தனையோ தடை !!!
அவளின் கொடி
இடை பெருகத்
தடை விதிக்குமா அரசு ???

வெற்றி

வெறுமையாக இல்லாமல்
வெறியோடு உழைத்தால்
வெற்றி வரும் வேரோடு !!!

குடும்ப வாழ்க்கை

1 தடவைத் திருமணம்
2 பிள்ளைச் செல்வங்கள்
3 படுக்கை அறையுடன் வீடு
4 நல்ல நண்பர்கள்
5 விதமாக ஆயுள் காப்பீடு
6 முறைச் சிற்றுலா வருடத்தில்
7 நாட்களும் வித்தியாசமான உணவு
8 மணி நேர உழைப்பு
9 மணிக்கு மேல் இரவுத் தூக்கம்
10  மாதத்துக்கு ஒரு புதியது கற்றல்

Tuesday, 23 April 2013

அர்த்தம்

வார்த்தைக்குள்  ஒளிந்திருக்கும் வளமை !!!

உண்மை

உள்ளத்தின் உண்மையை விட
உதடுகளின் மாயாஜாலம் வெற்றி பெறுகிறது !!!

Monday, 22 April 2013

நண்பன்

கவலையைக்
கொட்டித்
தீர்க்கும்
குப்பைத்தொட்டி !!!

பணம் - கணம்

பையில பணம் இருக்கலாம் ஆனா
தலையில கணம் இருக்கக் கூடாது !!!

Friday, 19 April 2013

இடி

வானக் குழந்தை
பிறந்ததும்
வந்த
அழுகையோ ???

முயற்சி

எட்டிப் போனாலும் தொடலாம்
பட்டுப் போனாலும் நடலாம்
தட்டிப் போனாலும் எழலாம்
முயற்சி இருந்தால் !!!

கொலுசுச் சத்தம்

அவள் பாதம் மண்ணை
முத்தமிடும் போது
கொலுசின் மணிகள் முத்தைத்
தழுவுதலின் வெளிப்பாடு !!!

தயார்

நரகத்துக்கும் செல்லத் தயார்
அவள் அங்கே இருந்தால் !!!

மின்தடை


பின்னோக்கி
ஒரு
அனுபவ பயணம்
கற்காலத்துக்கு !!!

மின்தடை

நார்வேயிடம் இருந்து
கடன் பெறலாமா
இரவுச் சூரியனை ???

கவனம் தேவை

வாகனத்தில் பயணம் கைபேசியில் கவனம்
தலை போகிற பேச்சானாலும் தவிர்க்கணும்
இல்லை தலையே போய்விடும் இலக்கணம் !!!

Wednesday, 17 April 2013

பார்வை

புத்தகத்தை
புரட்டும் போது
படமாக உள்ள
மொட்டும் மலரும்
அவள் விழிப் பார்வையில் !!!

Sunday, 14 April 2013

அவள் பாதம்

எத்தனை
விழிகளைப்
பதம்
பார்த்த
பாதம் !!!

புன்னைகை

நீ புன்னகைத்தால்
உன் கல்லறையிலும்
பூக்கள் புன்னகைக்கும் !!!

காவியம்

கலங்கிய
இதயத்துக்குக்
கலங்கரை
விக்கமானால் ...
இதயத்தில்
ஒரு
காவியமாய்
நீ இருப்பாய் !!!

இரவு

உருவமில்லா
உறக்கத்துக்கு
உயிர்
கொடுக்கும்
தாய் !!!

கால தேவதை

வயது கூடும் வருடம் பிறக்கும் போது
இரு மடங்காய் குறைகிறதே உன் நினைப்பால் !!!
நீ என்ன கால தேவதையா ???

Monday, 1 April 2013

முட்டாள்கள் தினம்

ஏமாறாமல்
ஏமாற்றினாலும்
ஏமாறுபவர் 
ஏமாறாதவரை
ஏமாற்றமே !!!

Thursday, 28 March 2013

வேதனை

மனதுக்கு
மட்டுமே
புரிந்த
மொழி !!!

Saturday, 23 March 2013

தண்ணீர் தினம்

ஒரு சொட்டின் அருமை நாக்கின் வறட்சியில்
ஒரு குளத்தின் அருமை குளிக்கா தேகத்தில்
ஒரு ஆற்றின் அருமை படுகையின் பஞ்சத்தில்
ஒரு மழையின் அருமை புவியின் விரிசலில்
வறண்டு விடும் வரம்பு மீறினால்
மிரண்டு விடும் சுரண்டி பரிமாறினால்
தேவையோடு பயன்படுத்துவோம் !!!
தேவாமிர்தமாய்ப் பாதுகாப்போம் !!!

Sunday, 17 February 2013

பறவைக் காதல்


படம் எடுத்தவருக்கு நன்றி ...

எழுத்து என்னுடையது !!!

Tuesday, 12 February 2013

காதலர் தினம்

காளையரும் கன்னியரும்
இளமையை இனிப்பாக்கும்
காதலெனும் அமுதைக்
கடைந்து சுவையை
அனுபவித்துக் கொண்டாடும்
காதல் நாள் இது !!!

Saturday, 26 January 2013

மேகம் - சோகம்

வானம்னா மேகம் வரும் போகும்
வாழ்க்கைனா சோகம் வரும் போகும் !!!

Saturday, 19 January 2013

அழுகை

கண்ணீரும் கூட அழும்
அவளை விட்டுப் பிரியும் போது !!!

விலை என்ன ???

வாங்கும் பொருளுக்கு விலை உண்டு
வாங்கும் மூச்சுக்கு என்ன விலை ???

Wednesday, 16 January 2013

தூக்கம்

மேலிமைக் கீழிமை
அணைக்கத் துடிக்கும் நேரம்
சேர விடுங்கள்
இந்தக் காதல் இதழ்
களை !!!

Saturday, 12 January 2013

தைத் திருநாள்

ஓரெழுத்தில் ஒரு தமிழ் மாதம்
தமிழர் கொண்டாடும் பெரு மாதம்
விதைத்த பயிரெல்லாம் வீடு சேரும்
போட்ட முதலெல்லாம் மும்மடங்காய் மாறும்
ஒரு காலம்  பொய்த்து விட்டாலும்
மறு காலம் வாழ வைக்கும்
வளமாக்கும் !!! வணங்குவோம் இயற்கையை !!!

Sunday, 6 January 2013

பா(ர்)வை

என் விழியும்
எனக்கு எதிரியானது !!!
அவன் விழிப்பார்வையோடு
சண்டையிட முடியாமல் !!!

அடிமை

அரசும் கூட
அடிமை தான்
ஒரு விதத்தில்
சாராயத்துக்கு !!!

பிரைடு ரைஸ்

கொழுந்து விட்டு எரிந்தது அடுப்பு
ஏற்கனவே வெந்து நொந்த அரிசியை
மீண்டும் வறுத்தெடுக்க !!!
இருக்குமா உயிர் ???