அடர் மேகம் அழகாக அந்தி வானம் ஆள
வளர் நிலா இருள் நீக்க வலம் வர
வெளிர் நட்சத்திரம் அளவோடு வெளிச்சம் தர
அதிகாலை வரை விழிப்போடுக் காவல் தொடர
கதிரவன் கண்ணுறக்கம் விழித்தெழுந்து கடல் குளித்து
உற்சாகத்துடன் ஒளி வெள்ளம் பாய்ச்ச உயிர்கள் அனைத்தும்
புத்துயிர் கொண்டுப் புதுநாள் காண இயற்கையுடன்
இணை செல்ல உயிர் வாழ உணவு தேடி
உழைக்க வாழ்க்கைச் சக்கரம் வழி விட
பகல் முழுதும் பாடுபடப் பனித்துளி போல்
வியர்வை சொட்ட தண்ணீர் வந்து தாகம் தணிக்க
தென்றல் வந்து வியர்வை விலக்கப் பூமித்தாய்
உணவளி(ள)க்க உயிர்கள் அனைத்தும் பசியாறப் பகல்
பொழுதும் உறங்கச் செல்லப் பகலவனும் படுக்கச் செல்ல
அடர் மேகம் அந்தி வானம் ஆள துவங்குகிறது !!!

No comments:
Post a Comment