Sunday, 28 April 2013

தேடல்

ஒவ்வொரு
பருவத்திலும்
எல்லோரும்
எதையாவது
தேடுகிறோம்
மரணத்தைத் தவிர !!!

ஆசிரியர்

சொற்களைப் பொருத்தமாகவும்
அர்த்தங்களைத் திருத்தமாகவும்
நற்பண்புகளை நயமாகவும்
நேர்மையை நேர்த்தியாகவும்
உழைப்பை உயர்வாகவும்
ஒழுக்கத்தை உயிராகவும்
மனதில் நிலைபெறச்
செய்யும் மகான் !!!

Friday, 26 April 2013

தடை வருமா


எத்தனையோ தடை !!!
அவளின் கொடி
இடை பெருகத்
தடை விதிக்குமா அரசு ???

வெற்றி

வெறுமையாக இல்லாமல்
வெறியோடு உழைத்தால்
வெற்றி வரும் வேரோடு !!!

குடும்ப வாழ்க்கை

1 தடவைத் திருமணம்
2 பிள்ளைச் செல்வங்கள்
3 படுக்கை அறையுடன் வீடு
4 நல்ல நண்பர்கள்
5 விதமாக ஆயுள் காப்பீடு
6 முறைச் சிற்றுலா வருடத்தில்
7 நாட்களும் வித்தியாசமான உணவு
8 மணி நேர உழைப்பு
9 மணிக்கு மேல் இரவுத் தூக்கம்
10  மாதத்துக்கு ஒரு புதியது கற்றல்

Tuesday, 23 April 2013

அர்த்தம்

வார்த்தைக்குள்  ஒளிந்திருக்கும் வளமை !!!

உண்மை

உள்ளத்தின் உண்மையை விட
உதடுகளின் மாயாஜாலம் வெற்றி பெறுகிறது !!!

Monday, 22 April 2013

நண்பன்

கவலையைக்
கொட்டித்
தீர்க்கும்
குப்பைத்தொட்டி !!!

பணம் - கணம்

பையில பணம் இருக்கலாம் ஆனா
தலையில கணம் இருக்கக் கூடாது !!!

Friday, 19 April 2013

இடி

வானக் குழந்தை
பிறந்ததும்
வந்த
அழுகையோ ???

முயற்சி

எட்டிப் போனாலும் தொடலாம்
பட்டுப் போனாலும் நடலாம்
தட்டிப் போனாலும் எழலாம்
முயற்சி இருந்தால் !!!

கொலுசுச் சத்தம்

அவள் பாதம் மண்ணை
முத்தமிடும் போது
கொலுசின் மணிகள் முத்தைத்
தழுவுதலின் வெளிப்பாடு !!!

தயார்

நரகத்துக்கும் செல்லத் தயார்
அவள் அங்கே இருந்தால் !!!

மின்தடை


பின்னோக்கி
ஒரு
அனுபவ பயணம்
கற்காலத்துக்கு !!!

மின்தடை

நார்வேயிடம் இருந்து
கடன் பெறலாமா
இரவுச் சூரியனை ???

கவனம் தேவை

வாகனத்தில் பயணம் கைபேசியில் கவனம்
தலை போகிற பேச்சானாலும் தவிர்க்கணும்
இல்லை தலையே போய்விடும் இலக்கணம் !!!

Wednesday, 17 April 2013

பார்வை

புத்தகத்தை
புரட்டும் போது
படமாக உள்ள
மொட்டும் மலரும்
அவள் விழிப் பார்வையில் !!!

Sunday, 14 April 2013

அவள் பாதம்

எத்தனை
விழிகளைப்
பதம்
பார்த்த
பாதம் !!!

புன்னைகை

நீ புன்னகைத்தால்
உன் கல்லறையிலும்
பூக்கள் புன்னகைக்கும் !!!

காவியம்

கலங்கிய
இதயத்துக்குக்
கலங்கரை
விக்கமானால் ...
இதயத்தில்
ஒரு
காவியமாய்
நீ இருப்பாய் !!!

இரவு

உருவமில்லா
உறக்கத்துக்கு
உயிர்
கொடுக்கும்
தாய் !!!

கால தேவதை

வயது கூடும் வருடம் பிறக்கும் போது
இரு மடங்காய் குறைகிறதே உன் நினைப்பால் !!!
நீ என்ன கால தேவதையா ???

Monday, 1 April 2013

முட்டாள்கள் தினம்

ஏமாறாமல்
ஏமாற்றினாலும்
ஏமாறுபவர் 
ஏமாறாதவரை
ஏமாற்றமே !!!