ஒரு சொட்டின் அருமை நாக்கின் வறட்சியில்
ஒரு குளத்தின் அருமை குளிக்கா தேகத்தில்
ஒரு ஆற்றின் அருமை படுகையின் பஞ்சத்தில்
ஒரு மழையின் அருமை புவியின் விரிசலில்
வறண்டு விடும் வரம்பு மீறினால்
மிரண்டு விடும் சுரண்டி பரிமாறினால்
தேவையோடு பயன்படுத்துவோம் !!!
தேவாமிர்தமாய்ப் பாதுகாப்போம் !!!