Wednesday, 15 January 2020

பொங்கல் வாழ்த்து

உங்கள் வாழ்வில்
   அன்பு பொங்க
   மகிழ்ச்சி பொங்க
   உடல்நலம் பொங்க
   மனவலிமை பொங்க
   செல்வம் பொங்க
   நற்சிந்தனைகள் பொங்க
   வளர்ச்சி பொங்க
   வெற்றி பொங்க
இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!!

பொங்குபவர் பொங்கின் பொங்குவது பொங்கி
பொங்காத பொங்கலும் பொங்கும் !!!

Thursday, 17 January 2019

மதிப்பு

பணத்தின் மதிப்பு 
தாளில் அச்சிடப்பட்டிருக்கும் 
முத்திரையில் !!!

மனிதனின் மதிப்பு 
அவன் செய்யும் 
நற்செயல்களில் !!!

தை திருநாள்

இயற்கை வளத்தோடு 
இல்லம் செழிக்க 
இடர் நீங்கி 
இன்பம் பொங்க 
இத்தைத் திருநாளில் 
இனிய வாழ்த்துக்கள் !!!

தை திருநாள்

இயற்கை வளத்தோடு 
இல்லம் செழிக்க 
இடர் நீங்கி 
இன்பம் பொங்க 
இத்தைத் திருநாளில் 
இனிய வாழ்த்துக்கள் !!!

தை திருநாள்

இயற்கை வளத்தோடு 
இல்லம் செழிக்க 
இடர் நீங்கி 
இன்பம் பொங்க 
இத்தைத் திருநாளில் 
இனிய வாழ்த்துக்கள் !!!

Monday, 12 February 2018

மண் பானை

மண்ணைக் குழைத்து
வண்டிச்சக்கரத்தின் மீதமர்த்தி 
வீரியமாய் அதுசுழல  
வளைந்து நெளிந்து 
நடனமாடி வளமான 
உருவத்தில் வேண்டிய
அளவுகளில் மண்ணே 
பொன்னான மகத்துவதில் 
குயவனின் பொற்கரங்கள்
பொறுப்போடு உருவாக்க
ஈரமாய் பிறப்பெடுத்த 
உடம்புக்கு சட்டையாய்
நெருப்பில் சுட்டெடுக்க 
உலகுக்கு வந்திட்ட
உத்தமனாய் மண்பானை !!!

Sunday, 24 April 2016

அவள் பார்வை

உடம்பைத் துளைக்காத 
கூர்மையான குண்டுகளோடு 
அழகான துப்பாக்கி !!!

தேர்தல்

வெற்றிலைக்குப் பாக்கு 
அரசமைய வாக்கு 
வாக்களிக்காமலிருப்பது பிற்போக்கு !!!

தேர்தல்

நாக்குத் தவறினாலும் 
வாக்குத் தவறக் கூடாது !!!
தவறாமல் வாக்களிப்போம் !!!

தேர்தல்

வாக்களிப்பது 
வாய்ப்பளிப்பது 
உன் கையில் !!!